search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அகோசரி முத்திரை"

    இந்த முத்திரையை செய்து வந்தால் மன ஒரு நிலைப்பாடு அதிகரிக்கும். கோபம் கட்டுப்படும். பலவிதமான மனக்கோளாறுகளுக்கு நன்மை அளிக்கிறது. மனம் அமைதி பெறும்.
    பெயர் விளக்கம்: ‘அகோசரம்’ என்றால் ஸ்தூலமான கண்களுக்கு புலப்படாதது என்று பொருள்படுகிறது. இம்முத்திரை புறக்கண்களுக்கு புலப்படாத சூட்சும நாடிகளில் பிராண சஞ்சாரத்தை மிகைப்படுத்தி மூலாதார சக்கரத்தை தூண்டுவதால் அகோசரி முத்திரை என்றுஅழைக்கப்படுகிறது.

    செயல்முறை: வசதியான தியான ஆசனத்தில் அமரவும். இரு கைகளையும் நீட்டி முழங்கால்களின் மேல் கைவிரல்களால் சின் முத்திரை செய்யவும். கண்களை மூடவும். உடல் முழுவதையும் தளர்த்திக் கொள்ளவும். கண்களை மெதுவாக திறந்து கருவிழி இரண்டடையும் மூக்கு நுனியை பார்க்கும்படி வைக்கவும்.

    கண் தசைகளை அழுத்தாமல் வைத்துக் கொள்ளவும். முக தசைகள் இறுக்கமடையாதபடி பார்த்துக்கொள்ளவும். சில விநாடிகளுக்குப் பிறகு கண்களை மூடி ஓய்வு பெறவும்.

    இம்முத்திரையில் மூச்சு சாதாரணமாக இருக்கட்டும். அல்லது சில விநாடிகள் மூச்சுக்காற்றை உள்ளுக்குள் இழுத்து நிதானமாக வெளியே விடவும். ஆரம்பத்தில் ஒரு சுற்றுக்கு சில விநாடியென 5 சுற்று பயிற்சி செய்யவும். தொடர்ந்த பயிற்சியால் 10 சுற்று வரை அதிகரித்து 10 நிமிடம் வரை பயிற்சி செய்யலாம்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம்: கருவிழிகள் இரண்டும் கீழ் நோக்கி இணைந்திருப்பதின் மீதும் ஆக்ஞா சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயன்கள்: மன ஒரு நிலைப்பாடு அதிகரிக்கும். கோபம் கட்டுப்படும். பலவிதமான மனக்கோளாறுகளுக்கு நன்மை அளிக்கிறது. மனம் அமைதி பெறும்.
    ×